Menu Close

இரவல் அறிவு கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

1) இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு
தேவை கடலளவு, கிடைப்பது கையளவா…???
கையையே கடலாக நினைத்துக் கொள்.

2) தேடுதல்
கண்கள் குருடாகலாம்
ஆனால் கருத்து குருடாகக் கூடாது
உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்
தன்னைப் போல் பிறரையும் நேசி
எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

3) இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

4) ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம்
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
தெரிந்ததாக வேடம் போடாதே
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல்
சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

5) அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும்
அறிவு ஆதிக்கம் செலுத்தும்
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

6) நான்
இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்’ என்னும் போது
அங்கே ‘நான்’ என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது

7) மௌனம்
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.