Menu Close

கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் ஆரம்பசுகாதார நிலையம் கட்ட எம் எல் ஏ ஆய்வு

கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த கண்ணமங்கலம் அடுத்த படவேடு சாமந்திபுரம் செல்லும் சாலையில் சுமார் 4 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பொதுமக்களின் கோரிக்கை அடுத்து, சாமந்திபுரம் செல்லும் சாலையில் உள்ள நிலத்தை சர்வையர் மூலமாக அளவிடும் மேற்கொண்டனர். இதை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது ஒரு ஏக்கரில் ஆரம்பசுகாதார நிலையமும், மூன்று ஏக்கரில் ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்துடன் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.