Menu Close

கலசபாக்கம் தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை : சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள் அமைத்து சளி,ஜுரம் உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்து வைரஸ் தாக்குதலிலிருந்து கட்டுப்பாடாக இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் எனது தொகுதிக்குட்பட்ட 21 இடங்களில் மினி மருத்துவமனை துவங்க உள்ளது கலசபாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட சீட்டம்பட்டு, அணியாலை, காம்பட்டு ,சிறுவள்ளூர், மதுரா, அய்யம்பாளையம், வீரளூர் மதுரை கூற்றம்பள்ளி, கீழ்பொத்தரை, கீழ்குப்பம் ஆகிய ஏழு கிராமங்களிலும், புதுப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட தொரப்பாடி, அமர்நாதபுதூர், கொட்டகுளம், மேலபுஞ்சை, தேவனந்தல், தாமரைப்பாக்கம், மஷார் ஆகிய ஏழு கிராமங்களிலும், ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டகரை, ஆட்டியானூர், வாழத்தும்பை, கானமலை புளியங்குப்பன் ஆகிய ஐந்து கிராமங்களிலும், போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அர்ஜுனாபுரம், தேவனாங்குளம், ஆகிய இரண்டு கிராமங்களிலும் என மொத்தம் 21 இடங்களில் தமிழக முதல்வரின் சீரிய திட்டத்தின் கீழ் மினி மருத்துவமனைகள் செயல்பட உள்ளன.

இந்த மருத்துவமனைகளுக்குக் கூடிய விரைவில் இடம் தேர்வு செய்து அதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு மருத்துவ உதவியாளர் என மூன்று பேர் பணியாற்றுவார்கள், இதனைப் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.