Menu Close

சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு, V.பன்னீர்செல்வம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், அவர்கள் சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில்,புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், P.புருஷோத்தமன், அவர்கள்,கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, அவர்கள்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப, துணை செயலாளர், செங்கம் கோபி, அவர்கள்,வழக்கறிஞர், ராதா, கொட்டகுளம் ராஜன், அம்மாபாளையம் துரைசாமி அவர்கள், புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர், C. ஜெயபிரகாஸ் அவர்கள்,மற்றும் கழக தகவல் ஒன்றிய, ஊராட்சி, நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.