Menu Close

தமிழக அரசின் ஊரக புறக்காடை கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 417 மலைவாழ் மக்களுக்கு அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் மற்றும் நம்மியம்பட்டில் தமிழக அரசின் ஊரக புறக்காடை கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மலைவாழ் மக்கள் வாழ்க்கை தரம் உயர, சுமார் 417 மலைவாழ் மக்களுக்கு, சுமார் 10,425 அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு அசில் இன நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.