Menu Close

பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவல பாதை உள்ளது. இந்த ஆன்மீக பக்தர்கள் ஆங்காங்கே விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.சு.கந்தசாமி அவர்கள் நேற்று 02.02.2020 காலை 8.00 மணியளவில் பர்வத மலை அடிவாரம் வன துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து துவக்கி வைத்தார்.

அவருடன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம், திரு.செல்வரசு மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு, திரு.பாலமுருகன் மேலாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மதன், தூய்மை கலசப்பாக்கம் இயக்கம், பசுமை இயக்கம், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மலை மீது பல்வேறு வழிகளில் சென்று காலை 6:30 மணிமுதல் ஆங்காங்கே சிதறி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் ஈடுபட்டனர். மலை மீது இருந்து குப்பைகளை கீழே கொண்டு வரும் பணிகளையும் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.