Menu Close

நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.

காலையில் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செல்லும் தாத்தாவுடன் ஒருநாள் பேரனும் சென்றான். அங்கு தியானத்தில் ஈடுபட்ட தாத்தாவின் தலை, தோள்களில் புறாக்கள் வந்தமர்ந்தன.
ஆனால் சலனம் இன்றி தியானத்தில் இருந்தார் தாத்தா.
கண்விழித்த தாத்தாவிடம் புறாக்கள் அமர்ந்த விஷயத்தை சொன்னான் பேரன்.
”நாளைக்கு வரும் போது புறாக்களை பிடித்துத் தாருங்கள் தாத்தா” என்றான் சிறுவன்.
பேரன் மீதுள்ள பாசத்தால் அவரும் சம்மதித்தார்.
மறுநாள் நடைபயிற்சி முடித்ததும் புறாக்களை பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தியானத்தில் அமர்ந்தார்.
நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.
”என்னவென்றே புரியவில்லையே. ஒரு புறாவும் வரவில்லையே.” என்றார் தாத்தா.
புறாவும் கிடைக்கவில்லை. தியானமும் கைகூடவில்லை என்பதால் தாத்தாவும், பேரனும் ஏமாற்றமுடன் திரும்பினர்.
ஆர்வமுடன் ஈடுபடும் போது பணி எளிதில் நிறைவேறும். ஆசை மட்டும் இருந்தால் அதன் முடிவு என்னாகும் என்பதை விளக்கும் கதை இது…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.