Menu Close

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்

நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒருநாள் பயிற்சி.

இந்த பிரத்யேக பயிற்சியில் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் கைப்பேசி எண்களை எங்களுடன் பதிவிடவும் இந்த பயிற்சி திறமைவாய்ந்த நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களால் சீரிய தனிக் கவனத்துடன் பயிற்றுவிக்கப் படுவதால் ஒவ்வொரு குழுவில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு Public Speaking Skills என்று சொல்லப்படும் பொது மேடை பேச்சு, நேர்காணலை எதிர்கொள்ளுதல், குழுவாக வேலை செய்தல் போன்ற முக்கியமான தனித் திறன்கள் பயிற்றுவிக்கப்படும்.

Posted in நிகழ்வுகள், வேலை வாய்ப்பு

Powered by J B Soft System, Chennai.