Menu Close

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 14 மார்ச் 2020, சனிக்கிழமை ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை திறன் வாய்ந்த அனுபவமுள்ள தேசிய அளவிலான பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள் திரு J செந்தில்முருகன் மற்றும் திரு D பிரபு அவர்களால் கலசப்பாக்கம் இளைஞர்களுக்காக மாண்புமிகு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்த்துக்களுடன் நடத்தப்படுகிறது.

வேலைதேடும் இளைஞர்களும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் இந்த ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறையில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இந்த ஒருநாள் பயிற்சி தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் வேலைக்கான நேர்காணலை செம்மையாகவும் திறமையாகவும் எதிர்கொள்வதற்கு தங்களை தயார்படுத்தும்.

மேலும் தகவல்களுக்கு 9677032573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மிக்க நன்றி !

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.