Menu Close

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி துவங்க வேண்டுமென கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர் செல்வம் பேசுகையில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற மாணவர்கள் சட்டக்கல்லூரியில் பயில வேண்டுமென்று சொன்னால் வேலூர் அல்லது விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகவே எங்களுடைய திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி துவங்க அமைச்சர் முன்வர வேண்டும். என்றார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் : திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரி வேண்டுமென்று உறுப்பினர் கோருகிறார். இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டக்கல்லூரியில் பயில வேண்டுமென்றால், செங்கல்பட்டு அல்லது புதுவை அல்லது சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். அந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் நகரத்தில் 77 கோடி ரூபாய் மதிப்புள்ள சர்வேத தரத்தில் ஒரு சட்டக்கல்லூரியை முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே வருங்காலத்தில் தேவையின் அடிப்படையில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சட்டக் கல்லூரி திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.