Menu Close

Author: admin_vpanneerselvam

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி கடமை மறந்து உழைக்காமலிருப்போரை கடவுள் ஒருநாளும் காப்பதில்லை… நடப்பது நடக்கட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே என அனுதினமும் கடமை ஆற்றுவோரை கடவுள் ஒருநாளும்…

திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம் !

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை… ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை… அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது……

இந்த உலகுக்கு பறை சாற்ற கிடைத்த வாய்ப்பு என்பதை உணருங்கள்…

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு சூழ்நிலையும், நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு பறை சாற்ற கிடைத்த வாய்ப்பு என்பதை உணருங்கள்…

ஒவ்வொரு மனிதனின் உயர்விலும் இந்த ஊரும், உலகமும் சற்றே உயர்கிறது…

ஒவ்வொரு மனிதனின் உயர்விலும் இந்த ஊரும், உலகமும் சற்றே உயர்கிறது… ஒவ்வொரு மனிதனின் தாழ்விலும் இந்த ஊரும், உலகமும் சற்றே தாழ்கிறது ! ஒவ்வொரு நாளும் சற்றேனும் உயர்வோம்… ஊரும் உலகமும் உயரட்டும்…எந்நாளும் !

வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை

வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை… பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை… வெற்றியோ ! தோல்வியோ… எப்போதும் அவர்களின் நோக்கம் அடுத்தது என்ன என்பதே… அடுத்த நாள்… அடுத்த இலக்கு… அடுத்த திட்டங்கள்… என்று…

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை…

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை… வாழ்க்கை என்பது தீர்மானமும் இல்லை… வாழ்க்கை என்பது இந்த பிரபஞ்சத்துடன் ஆன ஒரு இசைந்த பயணம்… இசைந்து பயணிக்கின்றவர்கள் பிரபஞ்சத்தின் சக்தியை இணைந்து வெளிப்படுத்துகிறார்கள்…

எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்… வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…

நம் திட்டங்களையும்… நம் செயல்களையும்… நம் சொற்களையும் தாண்டி… நம் எண்ணங்களே நம் வாழ்வை வடிவமைப்பதில் அதிக பங்காற்றுகிறது… நாம் எதைப் பிறருக்கு தர எண்ணுகிறோமோ… அதுவே நமக்கு தரப்படுகிறது… நாம் பிறருக்கு எதை…

எண்ணித் துணிக கருமம் !

எண்ணித் துணிக கருமம் ! சிந்தித்து செயல்படுவோம்… சிந்திக்கும்போது செயல் படவேண்டாம்… செயல் படும்போது சிந்திக்க வேண்டாம்… சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்… நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்… எம் மக்கள்…

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட… நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட… நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே, நம் வாழ்வை வடிவமைக்கிறது… நாம் யார் என்று தீர்மானிக்கிறது… கடவுள் (கட உள்); கண்டறி (கண்டு அறி),…

பிறப்பு சுதந்திரம்… வாழ்தல் சுதந்திரம்… ஈதல் சுதந்திரம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே… சுதந்திரம், சுதந்திர தினம்… வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள் கொண்டாட்டமும் அல்ல… பிறப்பு சுதந்திரம்… வாழ்தல் சுதந்திரம்… ஈதல் சுதந்திரம்… காத்தல் சுதந்திரம்… கடமையாற்றல் சுதந்திரம்……

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது… தேவையைப் பூர்த்தி செய்த பின்பும் தொடரும் உழைப்பு சேவை ஆகிறது… தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை… ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை… அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது……

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்… ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும் இந்த சமூகத்தின் எழுச்சி எப்போதும் பெரிதாகவே இருந்துள்ளது… முயற்சி தொடங்கட்டும்… முயற்சி தொடரட்டும்… முயற்சி வெற்றியைத் தரட்டும்… எம் மக்களின்…

முடிவெடு… புறப்படு… செயல்படு…

வெளிக்கொண்டுவர படாமல் பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும் அதற்கு மதிப்பில்லை… அதேபோல, வெளிக்கொணர படாத எந்த திறமைக்கும் மதிப்பில்லை… முடிவெடு… புறப்படு… செயல்படு… திறமையை வெளிக்காட்டி மதிப்புக்கூட்டப்பட்ட மனிதர்களாக வாழ்வோம் !

எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்… அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…

நிறைவேற்றக்கூடிய சக்தி இல்லாத எந்த திட்டங்களையும் கடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை… எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்… அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்… மெருகேற்றுங்கள்… செயலாற்றுங்கள்… நிறைவேற்றுங்கள்… புது உலகம் படைக்கப்படட்டும்… உங்களால் உங்களுக்காக…

Powered by J B Soft System, Chennai.