Menu Close

காலை வணக்கம்

தொடங்குங்கள்; தொடருங்கள்; சிகரம் தொடுங்கள் !

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.

அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…

பல நூல் படித்து
நாம் அறியும் கல்வி…

பொதுநலன் கருதி
வழங்கிடும் செல்வம்…

பிறர் உயர்விலே
இருக்கும் இன்பம்…

இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்…

சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்…

எண்ணித் துணிக கருமம் !

சிந்தித்து செயல்படுவோம்…

சிந்திக்கும்போது
செயல் படவேண்டாம்…

செயல் படும்போது
சிந்திக்க வேண்டாம்…

சிந்திப்பதும்…
செயல்படுவதும்…
பிரத்தியேகமாக
உச்சகட்ட ஆற்றலுடன்
நிகழட்டும்…

நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்…
எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

நாடும் மக்களும் நலம் பெறவே அயராது உழைக்கும் என் மனமெனும் ஆயுதத்திற்கு நன்றி…

உணர்வுகளுக்கு எல்லாம்
தலையாய உணர்வு…
நன்றி என்ற உணர்வு…

அந்த நன்றியின்
வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்…

கடவுளின் கருணைக்கு நன்றி…

என் மக்களின்
மனங்களுக்கு நன்றி…

என் விவசாயியின்
கலப்பைக்கு நன்றி…

என் நெசவாளரின்
கட்டு தறிக்கு நன்றி…

அனைத்து
கருவிகளுக்கும் நன்றி…

என் மாணவரின்
புத்தகத்துக்கு நன்றி…

பள்ளிக்கு நன்றி…
பாடசாலைக்கு நன்றி…

ஓட்டுநரின்
வாகனத்திற்கு நன்றி…

தாய்மார்களின்
சமையலறைக்கு நன்றி…

மின் விளக்குக்கு நன்றி…
சுற்றும் மின்விசிறிக்கு நன்றி…

மிதிவண்டிக்கு நன்றி…

கணிப் பொறியாளரின்
கணினிக்கு நன்றி…

கடைக்கு நன்றி…
கல்லாப் பெட்டிக்கு நன்றி…

என் உயிர் மூச்சான
தொண்டர்களுக்கு நன்றி…

நாடும் மக்களும்
நலம் பெறவே
அயராது உழைக்கும்
என் மனமெனும்
ஆயுதத்திற்கு நன்றி…

மிக்க நன்றியுடன்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

அந்த குறிக்கோளை அடைய மேற்கொள்ளும்… முயற்சியில் இருக்கும் மகிழ்ச்சியும் மகிமையும் சிறப்பானது…

ஒரு
குறிக்கோளை
அடைவதில் உள்ள
மகிழ்ச்சியை விட,

அந்த குறிக்கோளை
அடைய மேற்கொள்ளும்…
முயற்சியில் இருக்கும்
மகிழ்ச்சியும்
மகிமையும்
சிறப்பானது…

பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை…

வெற்றியாளர்கள்
தடைகளால்
தடுக்கப்பட்டு
தேங்கி கிடப்பதில்லை…

பின்னடைவுகளை
எண்ணி கலங்கி
நிற்பதில்லை…

வெற்றியோ !
தோல்வியோ…
எப்போதும்
அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன என்பதே…

அடுத்த நாள்…
அடுத்த இலக்கு…
அடுத்த திட்டங்கள்…
என்று சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள்…

இதுவே அவர்களின்
வெற்றி சூத்திரம்…

இந்த மனப்பாங்கே
அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக
மாற்றுகிறது…

பின்னடைவுகளை
பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும்
முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக
திகழ செய்கிறது…

நம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்… நம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…

வாழ்வின் அர்த்தம் தேடி புரிவோம்…
தேடி புரிந்ததை பகிர்வோம்…

ஒவ்வொருவரும் தன் இயல்பில் செயல்படும்போது
மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவோம்…

இயல்பும் தர்மமும் வேறு வேறல்ல…
தர்மத்துடன் செயலாற்றும் பொழுது
அந்த தர்மமே நம்முடன் செயலாற்றுகிறது…
அந்த தர்மமே நமக்காக செயலாற்றுகிறது…

அந்த தர்மமே நம்மையும்
இந்த உலகத்தையும் காத்து அருளட்டும்…

நம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்…
நம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…

இன்று அண்ணல் காந்தியடிகளின் 152 வது பிறந்த நாள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இன்று
அண்ணல் காந்தியடிகளின்
152 வது பிறந்த நாள்…

ரூபாய் நோட்டுகளில்
மட்டுமல்லாமல்…
நம்முடைய ஒவ்வொரு
சிந்தனையிலும்…
செயல்களிலும்…
அண்ணல் காந்தியடிகள்
வாழ்ந்து காட்டிய வழி நடந்து…
ஊரும் உலகமும் சிறக்க
வாழ்ந்து காட்டுவோம்…

முழு ஈடுபாட்டுடன்
நம் கடமை ஆற்றுவோம்…
புது உலகைப் படைக்கும்
மனநிறைவு கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

ஒற்றை தீர்வு ஒட்டுமொத்த மக்களுக்கும் தீர்வாகாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற மாய பிடி
விரைவில் விலகும் !
நீங்கள் நினைப்பதை விட
மிக வேகமாக,
உலகம் புதிய வேகத்தில்
மீண்டும் பயணிக்கத் தொடங்கும்…

ஒற்றை தீர்வு
ஒட்டுமொத்த
மக்களுக்கும் தீர்வாகாது…

அவரவர் இருக்கும்
நிலையிலிருந்து
வாழ்க்கை பயணம்
மீண்டும் தொடரட்டும்…

இடைப்பட்ட காலத்தில்…

புதியன கற்று தேருங்கள்..
புதிய திட்டம் தீட்டுங்கள் !
சூழ்நிலையை சாதகமாக்குங்கள் !

பல பரிணாமங்களில்
தயார் படுத்திக்கொள்ளுங்கள்…
தயாராக இருப்பவர்களையே
வாழ்க்கை புதிய வாய்ப்புகளுடன்
வரவேற்கும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஒருவரின் சக்தியும் ஆற்றலும்
பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

நல் உணர்வால் நிரம்பிய இதயம்…
சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…
சேவை செய்யும் கைகள்…

இவையே ஒருவரை
ஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது !

படைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…
வாருங்கள் அந்த படைத்தவனையே
அதிசயிக்க செயலாற்றுவோம்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மக்களும், மகேசனும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

படிக்கும்…
பார்க்கும்…
கேட்கும்…
ஒவ்வொரு விஷயங்களையும்,
ஒவ்வொரு கருத்துக்களையும்,
விழிப்புணர்வு என்ற வடிகட்டி
கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்…

உறுதிப்படுத்தாத கருத்துக்களை
அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…

*குறை சொல்வதை மட்டுமே*
*குறிக்கோளாக கொண்டவர்க்கு*
*தீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…*

உண்மையான அக்கறையும்,
அயராத உழைப்பும்…
விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…

*மக்களும், மகேசனும்*
*கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !*
*அறிவிக்கப்பட்ட நாளன்று*
*நல்லதொரு தீர்ப்பை எழுத…*

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

பாதைகள் வேறு வேறு ஆயினும்
பயணம் ஒன்றாகட்டும்…

உத்திகள் வேறு வேறு ஆயினும்
இலக்கு ஒன்றாகட்டும்…

ஒன்று கூடுவோம்
ஒற்றுமை உணர்வோம்

பலம் அறிவோம்…
நன்மைகள் பல பல புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த தானைத்தலைவர் நமது அண்ணா அவர்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

தமிழர்களின் அடையாளமாக
திகழ்ந்த தானைத்தலைவர் நமது
அண்ணா அவர்கள்…

கழகத்தின் விதையாய்,
வேராய் இருந்து நம்மை
விழுதுகளாய் விட்டுச்சென்ற
ஆலமரம் நம் அண்ணா அவர்கள்…

வேர் தொடும் விழுதுகளாய்
நம் அண்ணா அவர்களின்
பிறந்த நாளில்
அண்ணாவின் அனைத்து குணநலன்களையும்
நம்முள் வாங்கி
அண்ணா காட்டிய
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்று வழிநடந்து
கால காலத்திற்கும்
தமிழ் தேசத்திற்காக வாழ்ந்து
அண்ணா அவர்களின் கனவை
நிறைவேற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

நடக்கும் நிகழ்வுகள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நடக்கும் நிகழ்வுகள்
உங்கள் இயல்பை
மாற்றாமல் இருக்கட்டும்…

உங்கள் இயல்பு
நடப்பவைகளை மாற்றி முன்னேற்றட்டும்…

எந்த நிலையிலும்
தன் இயல்பை
மாற்றிக் கொள்ளாதவரின் புகழ் மலைபோல உயர்ந்து நிற்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Powered by J B Soft System, Chennai.