Menu Close

காலை வணக்கம்

வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…
போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…
நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…
வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும்
நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய
சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்…

நல்லதொரு எதிர்காலத்திற்கு
நிகழ்காலத்தில் தயாராகுங்கள்…

ஆகச் சிறந்த மனிதகுலம்
ஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்…
இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

அதில் இந்த சமூகமும் உலகமும் புதுப்பொலிவு பெறட்டும்…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

*நடப்பது நடக்கட்டும்…*
*நம் பணி தொடர்ந்து செய்வோம்…*

கருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்…

பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.

கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.

கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…

சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…

சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…

சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…
பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…

வாழ்க்கையின் ஓட்டத்தில் தடை கற்களாக தென்படும் ஒவ்வொன்றையும் சற்றே உற்று நோக்குங்கள், வேறு கோணத்தில் பாருங்கள்…

வாழ்க்கையின் ஓட்டத்தில்
தடை கற்களாக தென்படும்
ஒவ்வொன்றையும்
சற்றே உற்று நோக்குங்கள்,
வேறு கோணத்தில் பாருங்கள்…

அவை உங்களை
தடுத்து வீழ்த்தும் தடை கற்கள் அல்ல
உயர்த்தி நிறுத்தும் படிக்கற்கள்
என்பதை கண்டறிவீர்கள்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்…
அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…
பட்டறிவு…
படிப்பறிவு…
பிரித்தறிவு…
பகுத்தறிவு…
அனைத்தும்
எம் மக்கள் நலனை
நினைவில் நிறுத்தி
செயலாற்றட்டும்…
நல் இதயங்கள்
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…
அதில் நாளும் எம் மக்கள் வளமாய் வாழட்டும்…

இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு
கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…

உண்மையான வெற்றி என்பது,
நம்முடைய திறமையையும், அறிவையும்
முழுமையாக வெளிப்படுத்தி வாழ்தலே…

இந்த ஊரடங்கு நிலையிலும்…
நல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து…

அறிவை பட்டை தீட்டி…
திறமையை வளர்த்தெடுங்கள்…

புது வாய்ப்புகள் உங்களை கண்டெடுக்கட்டும்…
உங்கள் உயர்வில் இந்த உலகமும் உயரட்டும்…

மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…

விதையை இழக்காமல்
விருட்சம் இல்லை…

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது…

மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் இல்லாமல்
ஏற்றம் இல்லை…

ஏற்றம் பெற
மாற்றம் காணுங்கள்…

எம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் என் பங்கு எப்போதும் இருக்கும்…

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

கற்றதையும் பெற்றதையும்
கொண்டு நற் காரியங்கள்
செய்வீர்…

கற்றதை பகுத்தறியுங்கள்…
பெற்றதை பகிர்ந்து அளியுங்கள்…

கொடுக்க, கொடுக்க
வளர்வது இறையின் கொடை…

கொடுப்பவருக்கே
இங்கு அனைத்தும்
கொடுக்கப்படும்…

இது அறிந்து,
அறிய வைக்க வேண்டிய
இயற்கையின் இரகசியம் !

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட… நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…
நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே,
நம் வாழ்வை வடிவமைக்கிறது…
நாம் யார் என்று தீர்மானிக்கிறது…

கடவுள் (கட உள்);
கண்டறி (கண்டு அறி),
நீ யார் என்று !

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற
ஒற்றைச் சொல்
வளர்ச்சியை அடையும்
ரகசியமாகும்…

ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும்
இந்த சமூகத்தின் எழுச்சி
எப்போதும் பெரிதாகவே
இருந்துள்ளது…

முயற்சி தொடங்கட்டும்…
முயற்சி தொடரட்டும்…
முயற்சி வெற்றியைத் தரட்டும்…

எம் மக்களின் வாழ்வு வளமாக
தெய்வத்தாலும் ஆகட்டும்…
முயற்சியாலும் ஆகட்டும்…

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
தியானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
தீர்மானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
இந்த பிரபஞ்சத்துடன் ஆன
ஒரு இசைந்த பயணம்…

இசைந்து பயணிக்கின்றவர்கள்
பிரபஞ்சத்தின் சக்தியை
இணைந்து வெளிப்படுத்துகிறார்கள்…

சிந்தனையை செயல் ஆக்குவோம்… சொல்லை செயல்படுத்துவோம்…

ஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…
சிந்தனையை செயல் ஆக்குவோம்…
சொல்லை செயல்படுத்துவோம்…
செயலே முன்னேற்றத்தைத் தரும்…
செயலே உருவாக்கும்…
செயலே நிகழ்த்திக் காட்டும்…
அச்செயல் நற்செயலாக இருக்கட்டும்…
அச்செயல் நற்பலன்களை தரட்டும்…

Powered by J B Soft System, Chennai.