Menu Close

காலை வணக்கம்

நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள்

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான்
சோதனை.
நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார்.
உண்மையை பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.

எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!!

விசிறியை அசைக்காமல் காற்றும் வராது வியர்வை சிந்தாமல் வெற்றியும் கிடைக்காது!
எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!!
எந்த ஒரு சூழ்நிலைக்கு சிறந்த எதிர்வினை புன்னகை!!
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல!!
நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்
உண்மையின் உரை கல்…

இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.

தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை, கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,
எதையோ தேடி எதையோ பெற்று
எதையோ தொலைத்து, வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழும் வாழ்க்கை தான் கிடைத்திருக்கிறது.
இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர்
வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.
மனிதனுக்கு நிம்மதி இல்லாமைக்கு ஒரே காரணம் அமிர்தமே கிடைத்தாலும் அதைவிட சிறப்பான ஒன்று இருப்பதாக மனம் நம்புவதால் தான்.
வாழ்வில் நிஜத்தை தேடுங்கள், நிஜமென்று நம்புவதையெல்லாம் தேடாதீர்கள்.

கோபத்தை நிதானமாக காட்டு… அன்பை தாராளமாக கொடு…

உண்மையை உரக்கச் சொல்…
பொய்யை யோசித்து சொல் …
கோபத்தை நிதானமாக காட்டு…
அன்பை தாராளமாக கொடு…
எதைக் கொடுக்கிறாயோ..!! அதுவே… திருப்பி கிடைக்கும்..

நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.

காலையில் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செல்லும் தாத்தாவுடன் ஒருநாள் பேரனும் சென்றான். அங்கு தியானத்தில் ஈடுபட்ட தாத்தாவின் தலை, தோள்களில் புறாக்கள் வந்தமர்ந்தன.
ஆனால் சலனம் இன்றி தியானத்தில் இருந்தார் தாத்தா.
கண்விழித்த தாத்தாவிடம் புறாக்கள் அமர்ந்த விஷயத்தை சொன்னான் பேரன்.
”நாளைக்கு வரும் போது புறாக்களை பிடித்துத் தாருங்கள் தாத்தா” என்றான் சிறுவன்.
பேரன் மீதுள்ள பாசத்தால் அவரும் சம்மதித்தார்.
மறுநாள் நடைபயிற்சி முடித்ததும் புறாக்களை பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தியானத்தில் அமர்ந்தார்.
நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.
”என்னவென்றே புரியவில்லையே. ஒரு புறாவும் வரவில்லையே.” என்றார் தாத்தா.
புறாவும் கிடைக்கவில்லை. தியானமும் கைகூடவில்லை என்பதால் தாத்தாவும், பேரனும் ஏமாற்றமுடன் திரும்பினர்.
ஆர்வமுடன் ஈடுபடும் போது பணி எளிதில் நிறைவேறும். ஆசை மட்டும் இருந்தால் அதன் முடிவு என்னாகும் என்பதை விளக்கும் கதை இது…

முடிவில் வென்றான் மனிதன்.

மனிதனின்
கால்களை
வாருவதில்…

வாழைப்பழத்
தோலிற்கும்,
படித்துறை
பாசிக்கும்…

நடந்த
போட்டியில்…

முடிவில்
வென்றான்
மனிதன்.

மனம் மறுத்து போய்விட்டால் தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் வலுவிழந்து போய்விடுகிறது.

மனம் கூட ஒரு கல்லறைதான் தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கப் படுவதால். மனஉறுதி இல்லாதவர்களுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு சமனானது.

மனம் மறுத்து போய்விட்டால்
தன்னம்பிக்கை என்ற ஆணிவேர்
வலுவிழந்து போய்விடுகிறது.

மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது. நீங்கள் நல்லதை நினைத்து நகர்த்தும் செயல்கள் யாவும் நன்மைகளை
கொடுக்கும்.

நிம்மதியாக நீங்கள் வாழ
வேண்டுமெனில் உங்கள் மனதின்
கவலைகளை தூண்டிவிடும் சிலரை
சந்திப்பதையும், அவர்களைப் பற்றி
சிந்திப்பதையும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.

உண்மை என்பது அறுவை சிகிச்சை போன்றது சற்று வலிக்கும் ஆனால் ஆறிவிடும்.

யார் எப்படி இருந்தாலும் நீங்கள் நேர்மையாக இருங்கள். அது தரும் பரிசே உண்மையான “கம்பீரம்”.
– கெளதம புத்தர்.
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு இல்லை.
உண்மை என்பது அறுவை சிகிச்சை போன்றது சற்று வலிக்கும் ஆனால் ஆறிவிடும்.
பொய்கள் என்பது வலிநிவாரணி போன்றது. உடனடி ஆறுதல்
அளிக்கும். ஆனால் காலம் முழுதும் பக்கவிளைவுகள் தொடரும்.

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்

காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்!

உலக அரசாங்கமே வானுயர்ந்து பார்க்கும் அளவிற்கு பல திட்டங்களை வாரி வழங்கிய ஆட்சி நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மட்டும்தான்!
காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்!
இப்போதும் சொல்கிறேன்.
இலை மலர்ந்தால் இந்திய தேசமே வளரும்!
இதயதெய்வத்திற்கு 75வது பிறந்தநாள்!

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்…!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…?
வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை…
யார் முன்னே யார் பின்னே என்பதற்கு…
அது நடைப்பாதை
பிறப்பிலிருந்து இறப்பு வரை,
இதில் இன்பம் துன்பம்
எதுவும் நிரந்தரமில்லை…
இதைக் கடைசியில் புரிந்துக் கொண்டு
எந்தப் பயனுமில்லை…
இருக்கும் வரை அனைவரையும்
மகிழ வைப்போம்…
மனிதனை மனிதனாக மதிப்போம்
வாழ்க மனிதம்…!
ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன்…….

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால்,
உழைக்க விரும்பு
இரை தேடு, இறையையும் தேடு
நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்
பெரியோரை வணங்கு ,
சிறியோரை வாழ்த்து
இவையே உன் வாழ்வை உயர்த்தும்..!
மலையளவு துன்பத்திலும்
மழலைப் போல் சிரி
மாயை போல் வழி
மாறிப் போய் விடும் வலி

வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை…

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கு
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..
வலிகளை சுமந்து வழியைத் தேடும்
பயணம் தான் வாழ்க்கை…

தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம்.
இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே
முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர்.
வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
உங்கள் வாழ்வில் உங்களால் எல்லா சூழ்நிலைகளையும் தனியாக கடக்க முடிந்தால் உங்களை விட மிகச் சிறந்த வீரர் யாரும் இல்லை.
தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.
இந்த பிரபஞ்சமே உங்களுக்கு துணையாக நிற்கும்.
வாழ்ந்து காட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக உங்களால் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும்.
வாழ்ந்து காட்டி விடுங்கள்!
இறைவன் அருளால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்..
உறங்கும் விதை விழிக்கும் வரை…
உறையிட்ட வெற்றுப் பொருள் தான்…
உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்….
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி…
உலகத்தை உறுதியோடு பாருங்கள்…
வானம் ஒன்று…
வாழ்க்கையும் ஒன்று…
இதில் யாருக்கும் வேறுபாடில்லை.
ஒர் சாண் வயிற்றுக்கு மேலே எதுவும் நிரம்புவதில்லை….
தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்….
தடைகளை உடைத்திடுங்கள்…
தோல்விகளைப் படிக்கட்டாக்கி
வெற்றிக் கோட்டையை வென்றிடுங்கள்!

Powered by J B Soft System, Chennai.