Menu Close

காலை வணக்கம்

கடல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு.
கடல்நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.
இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.
அதுபோலவே இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார். அனுதினமும் மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை. அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள் உங்கள் வேண்டுதல் வீண்போகாது.

கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை…

சிந்தனைச் சிதறல்
உன் வாழ்க்கையில் கொஞ்சம் குழந்தைத்தனம், கொஞ்சம் வெகுளித்தனம், கொஞ்சம் கிறுக்குத்தனம்…
கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை…
இவைகள் இல்லையென்றால் நீ வாழ்க்கையை இறுக்கமாகவும், சீரியஸாகவும், மன அழுத்தத்துடனும் வாழ்கிறாய் என்று அர்த்தம்.
உன் கையை விட்டு போன ஒவ்வொரு நாளும் திரும்பி வராது. உன் கையில் இருக்கும் போதே வாழ்வை முழுமையாக வாழ்ந்து விடு. போதனையின் சாரம் இதுவே.
புத்தர்.

மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றே.
ஆனால் அதை எந்த அளவுக்கு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது..
சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளால் நமது வாழ்வின் அற்புதமான நாட்களை மகிழ்ச்சியாக வாழாமல் வீணாக்கி விடுகிறோம்.
உங்களை நீங்கள் முழுமையாக அன்பு செய்யும் பொழுது
மற்ற எதுவும் உங்களுக்கு கவலைகளை தராது.
மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்களை நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி முழுமையாக அன்பு செய்யுங்கள்!
மற்றவர்களுக்கு கிடைத்த அனைத்தும் நமக்கு கிடைக்கவில்லையே
என்று வருத்தப்படாதீர்கள்.
இறைவன் உங்களுக்காக அளித்ததை மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கான சாவியை மற்றவர்கள் கைகளில் தராதீர்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் பொறுப்பு.

பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.
அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும் .
ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.
சிந்தனைகளை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.
மாற்ற முடிந்ததை மாற்றுங்கள்.
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
இது இறைவன் தந்த வாழ்க்கை.
அவர் பார்த்துக் கொள்வார்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே .
வாழ்ந்து பார்த்து விடுங்கள்.
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

இன்றைய சிந்தனை
அறிவில்லாத நேர்மை பலவீனமானது.
நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
எண்ணங்களைச் சம்பவமாக்குவது
அரசியல்.
நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.
எதிர்காலம் தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.

இறையருளை விட மிகப் பெரிய செல்வம் உலகில் எதுவும் இல்லை.
இறையருள் என்ற ஒரு செல்வம் உங்களுடன் இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும்.
உண்மையில் மற்ற எதுவும் பெரிதாக தெரியாது.
ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.
நிச்சயம் உங்கள் நாட்கள் மிகச் சிறப்பாக இருக்கும்!
இறையருளால் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அடைந்து மிகச்சிறப்பான அழகான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

புத்திமதி… அறிவாளிக்கு தேவையற்றது..! முட்டாளுக்கு பயனற்றது.,.!!

தினம் சில சிந்தனைகள்.
விடியல் வணக்கம்.
அன்று… தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்தோம்..!
இன்று… தண்ணீரையே சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்….!
இதுதான் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி…!!
புத்திமதி…
அறிவாளிக்கு தேவையற்றது..!
முட்டாளுக்கு பயனற்றது.,.!!

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!..

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!..
பொறாமை இருந்தால் வாழ்க்கைக்கு தாங்கள் அடிமை!!
வாழ்க்கையை ரசித்து யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..!!

உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது, கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌

நாணயத்தில் இரண்டு பக்கமும்,
பதிவுகள் இருக்க வேண்டும்…
தலை இல்லை என்றாலும்,
பூ இல்லை என்றாலும் மதிப்பு இல்லை தானே?
உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது,
கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌
கடமைக்காக செய்தால்,
உரிமை கிடைக்குமா?
கண்ணிமையாக கடமையைப் பார்த்தால்…
*வெற்றி நிச்சயம்!*

ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது

நற்காலை வணக்கம்.
நலம்,வளம் பெற்று வாழ்க!
“ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது.
அதை கண்டுபிடித்து விட்டால் வாழ்க்கையை நாம் வென்று விடலாம்.”

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்

_*சிந்தனைச் சிதறல்*_
_மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள்.எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
_துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
_திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.
_வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
_உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால்,
உழைக்க விரும்பு
இரை தேடு, இறையையும் தேடு
நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்
பெரியோரை வணங்கு ,
சிறியோரை வாழ்த்து
இவையே உன் வாழ்வை உயர்த்தும்..!
மலையளவு துன்பத்திலும்
மழலைப் போல் சிரி
மாயை போல் வழி
மாறிப் போய் விடும் வலி

நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது.
அது நம் வாழ்க்கையையும் சிறப்பாக வழி நடத்தும்.
சில நேரங்களில் நாம் கேட்பது அனைத்தும் உடனே கிடைக்கலாம்
சில நேரங்களில் கிடைப்பதற்கு தாமதமாகலாம்.
நாம் கேட்டது உடனே கிடைக்கவில்லை என்றால் இறைவனிடம் கோபித்துக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் நமக்கு வரும் எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து நமக்கே தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நம்மை காத்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம்.
நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.
நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!
நல்லதே நடக்கும்.
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

Powered by J B Soft System, Chennai.