Menu Close

காலை வணக்கம்

நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.

பிர்லாவை போல சம்பாதித்தேன். ஊதாரியை போல செலழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனை போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
– கவிஞர் கண்ணதாசன்.
சோற்றைவிட, உப்பிற்கே மரியாதை அதிகம். ஆனாலும் விரலளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஆடம்பரமும் அப்படித்தான்.
நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காகத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே சாதிக்க முடியாது உன்னால்..

யாரையும் எதிர்பார்த்து
வாழ்ந்து விடாதே..
எழுந்து கொள்ளக் கூட
துணை தேவைபடும்
பின்னால்..
யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதே
சாதிக்க முடியாது
உன்னால்..
எதிர் கொண்டு
வாழ்ந்து பார்
தடைகள் விலகி
விடும் தன்னால்..
நன்னாள் வரும்
என்று
இன்நாளை நீ
இழந்தால்
நிழல் கூட
துணை வராது
உன் பின்னால்..

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க …

இன்றைய சில சிந்தனைகள்!!!!*
நம் ஆசைகளின்
ஓட்டங்களுக்கு எல்லாம்….
நிம்மதி என்ற
விலைமதிக்க முடியாத_
ஒரு பொக்கிஷத்தை_
அடகு வைத்துக் கொண்டு_ இருக்கின்றோம் என்பது….
கவனிக்கப் படாத
உண்மை….
முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்று வருந்துவதை விட …
அடுத்த வெற்றிக்கான முயற்சியை‌ முன்னதாக கொடுத்து விட்டோம் என்று நினைப்பது வெற்றிக்கான முதற்படி………!!
மற்றவருக்கு நம்பிக்கையாக இருங்கள் …
ஆனால் …
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு
நம்பிக்கையா இருக்காதீங்க …
எப்போது உங்களின்
விருப்பமும் , வேலையும்
ஒன்றாக ஆகிறதோ,
அப்போது, நீங்கள்
சாதிக்க துவங்குவீர்கள்…
இன்பங்களைப் பெற முயல்வதை விட,
லட்சியங்களைப் பெருக்க முயல்வதே மேல்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் …
மனிதனுக்கு மதி என்பது தேவையே இல்லையே …

பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்..

பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!

ஒருநாள் திரும்பி உங்களை தேடி வருவார்கள் ..

கோபத்தில் உங்களை விட்டு
சென்றவர்கள்
கண்டிப்பாக
ஒருநாள் திரும்பி உங்களை தேடி
வருவார்கள் …
ஆனால் சிரித்துக் கொண்டே
சென்றவர்கள்
ஒருநாளும் வரவே
மாட்டார்கள்…

வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.
முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.
வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல்
ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.
அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.
உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.
எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.
உங்களை வெல்ல யாராலும் முடியாது.
அப்போது உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை,அவரின் மனநிலை அறிந்து பேசுவது மிகவும் நல்லது…
ஏனெனில் அடியை கூட பொறுத்துக் கொள்ளும் இதயம் சிலரின் வார்த்தைகளை பொறுக்காது.!
எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.
மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.
கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை.

ஏதோ ஒரு கணத்தில்.. வெறுப்பும்..சலிப்பும்.. வருவதை தடுக்கமுடியாது

வாழும் வாழ்க்கையை
எவ்வளவுதான்
சுவாரஸ்யமானதாக
வைத்துக்கொண்டாலும்..
அப்படி இருப்பதாக
காட்டிக் கொண்டாலும்..
ஏதோ ஒரு கணத்தில்..
வெறுப்பும்..சலிப்பும்..
வருவதை தடுக்கமுடியாது!
அதை எவ்வாறு கடக்கிறோம்
என்பதைப் பொறுத்தே
எஞ்சிய வாழ்வின்
சுவாரஸ்யம் அடங்கியுள்ளது!

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்……..!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…?
வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை…
யார் முன்னே யார் பின்னே என்பதற்கு…
அது நடைப்பாதை
பிறப்பிலிருந்து இறப்பு வரை,
இதில் இன்பம் துன்பம்
எதுவும் நிரந்தரமில்லை…
இதைக் கடைசியில் புரிந்துக் கொண்டு
எந்தப் பயனுமில்லை…
இருக்கும் வரை அனைவரையும்
மகிழ வைப்போம்…
மனிதனை மனிதனாக மதிப்போம்
வாழ்க மனிதம்……..!
ஓம் நமச்சிவாய

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.

கெட்டவர்கள் வெகு விரைவில் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களின் குணத்தால் அல்ல அவர்கள் வைத்திருக்கும் பணத்தால்.
பணம் எங்கெல்லாம் பேச தொடங்குகிறதோ, அங்கெல்லாம் தர்ம நியாயங்கள் தலையைக் கவிழ்ந்து மௌனமாகிவிடும்.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.
ஆனால் உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும் அப்போது யார் யார் எப்படி என்ற மாயை விலகும்.
– பகவத் கீதை.

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.
மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
புத்தர்.
ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.

ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.
மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
புத்தர்.
ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.
அமைதியாக போவதை வைத்து கோழை என்று நினைத்து விடாதீர்கள். வார்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு நிறைய மன உறுதியும் பக்குவமும் தேவை.
சிறந்த பக்குவம் என்பது சொல்வதற்கு
நம்மிடையே பதில்கள் நிறைய இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தை தேர்ந்தெடுப்பது ஆகும்.
விட்டுக் கொடுப்பவர்களுக்கு கோபப்படத் தெரியாது என நினைக்காதீர்கள் அவர்களுக்கு, யாரையும் புண்படுத்த தெரியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களைச் சுற்றி உள்ளவர்களை…
நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால்..
முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களிடம் இல்லாத
ஒன்றை …
நீங்கள் யாருக்கும்..
கொடுக்க முடியாது.

Powered by J B Soft System, Chennai.